Peace and Conflict

யார் தான் நல்லவர்கள்?

-நாரதர்-

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்று சமாதானத்திற்கு ஆதரவாக செயற்படுபவர்கள் அனைவரும் புலிகள் , தேசத்துரோகிகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இத்தரக்குறைவான சிந்தனைக்கும் பேரினவாதிகளின் போக்கிற்கும் நாட்டின் அனைத்து சக்திகளும் அணிதிரண்டு ஆதரவாக செயற்படுகின்றன.

இவற்றின் வெளிப்பாடகவே இன்று கொழும்பில் பெரும்பாலான பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ள பதாதைகளில் காணக்கூடியதாயுள்ளது.

அது,

சமாதான புலிகள்
ஊடக புலிகள்
இடதுசாரி புலிகள்
இணங்கண்டு கொள்வோம்
அழிப்போம்
நாட்டைக் காப்பாற்றிக் கொள்வோம்

பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம்

என்பதாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம் எனக் கூறிக்கொள்ளும் இவ்வியக்கம் , அவ்வாறாயின் சமாதானத்திற்கான வழி இது தான் என பதாதை ஒட்டவதில்லையே.பயங்கரவாதத்தின் எதிராளிகள் என தெரிவிக்கும் இவர்களே இனவாதிகளின் பெற்றோர்களும் ஆவார்கள்.

நாட்டில் இனப்பிரச்சினை தொடர்ந்து உக்கிரமடைந்து செல்லும் நிலையில் சமாதான பேச்சுவார்த்தைக்கே இடமில்லையென்ற வகையில் அதற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றமை மிகவும் வேதனையைத் தருகிறது.

(நிலைமை இவ்வாறு தொடர்ந்தால் இலங்கையிலும் ‘பொடா” சட்டத்தை உருவாக்கி விடுவார்களோவென எண்ணத்தோன்றுகிறது)
dscf5729.JPG