groundviews is a Sri Lankan citizen journalism initiativeregister here.login.find out more
inicio mail me! sindicaci;ón

Author Archive

பின்;-காலனிய இலக்கியம்

ஏகாதிபத்தியற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு

அதிகாரம் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் தொழிற்படும் யுகம் இது. இதனால் அதிகாரம் பற்றிய பல்வேறு, மதிப்பீடுகள்,சிந்தனைகள் முன்வைக்கப்படும் காலமாகவும் இது மாறியுள்ளது. அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் சிந்தனைகளோடு கடந்த நூற்றாண்டில் அறிமுகமாயிருக்கும் பின்-நவீனத்துவம் சர்வதேச அளவில் புலமையாளர்களின் கவனத்தையீர்த்த கோட்பாடாகும் அதிகாரம் தொழிற்படும் நுண்களங்களைக் கூட நுட்பமாக தோலுரித்துக் காட்டியதில் பின்-நவீனத்துவத்தின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது எனும் கருத்து விமர்சனபூர்வமாக அணுகப்பட வேண்டும் என்பதே எமது கணிப்பு.

புpன்காலனிய இலக்கியமும் பின்-நவீனத்துவத்தின் அதிகாரம் பற்றிய பார்வையின் பின்னணியிலேயே வைத்து விளக்கப்படுகிறது. மேற்கு தமது காலனித்துவத்தின் ஊடாக மூன்றாம் உலக நாடுகள் மீது மிக மோசமான சுரண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி அவர்களின் தனித்துவ சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரப் பாரம்பரியங்களையும் பெறுமனங்களையும் சிதைத்து தனது கலாசாரக் கூறுகளை திணித்ததே காலனித்துவ யுகத்தின் வரலாறாகும். இந்த காலனித்துவ காலத்தில் தங்களின் இறந்த காலத்தை பறிகொடுத்த மூன்றாம் உலக மக்கள் அதனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களின் இலக்கியங்களிலும் இம்முயற்சிகள் பிரதிபலிக்கத் தொடங்கின.

மேற்கினால் தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்நிய சமூகப் பொருளாதார, அரசியல் மாதிரிகளை அதற்குள் …